அறிவிப்பு - அழைப்பிதழ்
தலித் மக்கள் பலதுறைகளில் பெறுகின்ற தெளிவும் அறிவும்
தன்னிகரற்ற துணிச்சலையும் தன்னம்பிக்கையும் தரும் என்கிற வரலாற்று அனுபவத்துடன் தலித்
உரையாடல் அவையின் முதல் நிகழ்வு வரும் 17.02.2019
அன்று ஞாயிற்றுக் கிழமை மதியம் 3 மணி முதல்
நடைபெறவுள்ளது. இடம் 38/72/2,
Block L, L Block, 1st Avenue, Anna Nagar
East, Chennai, Tamil Nadu 600102 (சென்னை, அண்ணா நகர் சிந்தாமணி அருகில் புதிய ஆவடி டாங்க சாலைக்கு போகும் திசை
) முதல் நிகழ்வில் கருத்துரைகள் மற்றும் திட்டமிடல்கள் நடைபெறவுள்ளன.
வரவேற்புரை
பேராசிரியர் டாக்டர் கோ பழனி
தமிழ்த்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்
1. விவாதிக்கப்பட உள்ள கருப்பொருள்
தலித் உள்ளிட்ட
பெயர் அடையாளங்களும் அவற்றில் வரலாறும்
தலித் என்னும் சொல்லாடல் பற்றி தற்போது நிலவுகின்ற
கருத்துகள் பற்றின விவரனையும். கடந்த 1600 ஆண்டுகளாக ஒரு சமூகத்திற்கான சுட்டுப் பெயர்
எவ்வாறு கால மாற்றங்களுக்கு ஏற்ப மாறி மாறி வந்துள்ளது என்பதையும், 1850க்கு பிறகு
இந்த பெயர் மாற்றங்கள் எப்படி பத்தாண்டுகளுக்கு ஒருமுறை வேறுவேறு வடிவங்களை எடுத்தன
என்பதைப் பற்றி விரிவாக ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இறுதியாக தலித் எனும் சொல்லாட்சியின் தோற்றமும் அதன் மறைய
வேண்டிய வரலாற்றும் தேவையைப் பற்றியும் முதல் கருத்துப்பட்டறை முடிவுறும். தொடர்ந்து
கேள்வி பதில்கள்.
பயிற்றுநர்
கெளதம சன்னா
ஆய்வாளர், எழுத்தாளர் கடந்து 25 ஆண்டுகளுக்கு மேலாக
தலித் வரலாறு மற்றும் சமூகவியல் துறையில் தொடர்ந்து இயங்கி வருபவர். 10க்கும் மேற்பட்ட
நூல்கள், நூற்றுக்க்காண கட்டுரைகள், இலக்கிய படைப்புகளை எழுதியதுடன், சர்வதேச ஆய்விதழ்கள்
இவரது கட்டுரைகளை வெளியிட்டுள்ளன. இரண்டு பல்கலைக் கழகங்கள் இவருடை படைப்புகளை பாடமாக
வைத்துள்ளன.
2. விவாதிக்கப்பட உள்ள கருப்பொருள்
தலித் உள்ளிட்ட
சொல் உலக அரங்கில் உருவாக்கியத் தாக்கங்கள்
தலித் எனும்
சொல்லாட்சியினை சர்வதேச சமூகம் எப்படி எதிர்கொண்டது, எதிர்கொள்கிறது மற்றும் அதன் சர்வதேச
தாக்கங்களையும் அதன் மூலம் அது இந்திய அரசியலில் உருவாக்கிய மாற்றங்களையும் ஆய்வுக்கு
எடுத்துக் கொள்கிறது. தலித் எனும் சொல் தற்போதைய புதிய உலகில் அது என்னவகையான அணுகுமுறைகளுக்கு
உள்ளாகிறது. அதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றியும் விரிவாக ஆய்வுகுட்படுத்தும்
விதமாக அமர்வு இருக்கும்.
பயிற்றுநர். பேராசிரியர். டாக்டர். யூகோ கொரிஞ்ச்
இங்கிலாந்தின் புகழ் பெற்ற எடின்பரோ பல்கலைக்கழகத்தில்
சமூகவியல் துறையின் பேராசிரியராக பணியாற்றுகிறார். தலித் அரசியல் குறித்த ஆய்வில் முனைவர்
பட்டம் பெற்றவர். தமது ஆய்வு தொடர்பாக தமிழகம் மற்றம் இந்தியா முழுமைக்கும் பயணம் செய்து
தரவுகளைத் திரட்டி தனது ஆய்வேட்டினை சமர்ப்பித்து டாக்டர் பட்டம் பெற்றவர். தொடர்ந்து
தலித் அரசியல் போக்குகள் குறித்து சர்வதேசத் தளங்களில் உரையாற்றி வருவதுடன், பல ஆய்வு
கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். ஏராளமான கட்டுரைகளும், நான்கு நூல்களும் எழுதியுள்ளார்.
3. நிகழ்வில்
பங்கேற்கும் அனைவரின் ஒத்துழைப்பு மற்றும் ஆர்வங்களில் அடிப்படையில் தலித் உரையாடல்
மையத்தின் எதிர்கால வகுப்புகள் மற்றும் செயல்திட்டங்கள் பற்றின ஆய்வும் திட்டமிடலும்
நடைபெறும். இந்த விவாத மற்றும் திட்டமிடல் நிகழ்வினை
பேராசிரியர்
குடியரசன் (வடமலை கந்தசாமி) அவர்கள் ஒருங்கிணைக்கிறார்.
4. நிகழ்வில்
கலந்துக் கொள்ள விரும்பும் அனைவரும் முன்கூட்டியே வருகையினை உறுதிப்படுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் பின்வரும் கைப்பேசி எண்ணில் தமது பெயரை தெரிவித்து
இசைவை பெற்றுக் கொள்ளலாம். அரங்கில் அவருக்கான அனுமதி அட்டை வழங்கப்படும்.
தொடர்பு எண்கள் - 98415 44115 / 88380 57210 / 90032 18685
மின்னஞ்சல்
- contact2ddf@gmail.com
5. தொடர் நிகழ்வும்
பயிற்சியும் திட்டமிடப்பட்டுள்ளதால் பங்கேற்கும் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படும்
விதமாக நுழைவுக் கொடையாக ரூ.50 செலுத்த வேண்டும். தேநீர், தரவுப் பொருள்கள் உள்ளிட்ட
செலவினங்களுக்கு அது பயன்படுத்தப்படும்.
தலித் வரலாற்றினை கற்போம்
தலித் அரசியல் விடுதலையை வென்றெடுக்க பங்களிப்போம்.
இவண்
ஒருங்கிணைப்பாளர்கள்

Comments
Post a Comment