Skip to main content

தலித் உரையாடல் அவையின் விண்ணப்பம்

இங்கே தட்டுங்குங்கள். தலித் வரலாற்றைக் கற்கவும் கற்பிக்கவும் உங்களை இணைத்துக் கொள்ள இங்கே தொட்டு விண்ணப்பத்தைப் பெறுங்கள் - நிரப்புங்கள் - உரையாடல் அவையில் இணையுங்கள்.


(A Platform for Discussing Dalit's History, Culture, Art, Ideology, Political Economy and Dr.Ambedkar)

தலித் வரலாற்றை கற்கவும் கற்பிக்கவும் விருப்பம் உள்ளவர்களுக்கான அழைப்பு.
முன்னூறு ஆண்டுகளாக மாபெரும் சமூக அரசியல் மாற்றத்திற்கு வித்திட்டு வளர்ந்து வந்த தலித் சமூகவியல் தற்போது கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. உள்ளும் புறமும் அதன் மீது கடுமையான தாக்குதல்கள் நிகழத் தொடங்கியுள்ளன. மாபெரும் ஆசான்களான பண்டிதர் அயோத்திதாசர், எம்.சி.ராஜா, ரெட்டமலை சீனிவாசம், டாக்டர் அம்பேத்கர் உள்பட மாபெரும் தலைவர்கள் முன்னெடுத்து வளப்படுத்திய தலித் சமூகவியலில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்த வேண்டியது அவசியமாக இருக்கிறது.
தலித் கருத்தாடல்களில் மிக முக்கியப் பங்கினை வகிக்கும் தத்துவம், தலித் அரசியல் பொருளாதாரம், சட்டம், அரசியல், வரலாறு, கலை, பண்பாடு, மதம், நாட்டார் வழக்காறுகள் உள்ளிட்டவைகளில் தலித் ஆளுமைகளின் பங்களிப்புகளும் படைப்புகளும் தொடர்ந்து மறைக்கப்பட்டும், இருட்டடிப்புச் செய்யப்பட்டும் வருகின்றன. இதனால் சமூகத்தின் ஒட்டு மொத்த விடுதலைக்கு போராடும் தலித் மக்கள் தனிமைப்படும் சூழலுக்கு ஆளாகியுள்ளனர். இதற்குக் காரணம் மேற்கண்டத் துறைகளில் குறிப்பாக தலித் வரலாறு குறித்த அறியாமையும், விழிப்புணர்வு இல்லாமையுமே. இதில் போதுமான அளவு முன்னேறினால் வரலாற்றின் ஒளி இக்கால சமூகத்தின் மீது விழுந்து பெரும் மாறுதல் நிகழும்.
அந்த உன்னதமான நோக்கத்தினை செயல்படுத்தும் விதமாக Dalit Dialogue Forum பணிகளை முன்னெடுக்க உள்ளது. சமூகம் எப்போதெல்லாம் இக்கட்டில் சிக்கிக் கொள்கிறதோ அப்போதெல்லாம் அச்சமூகத்தின் அறிவாளிகள் முன்வந்து கடமையாற்றுவார்கள் என்று புரட்சியாளர் அம்பேத்கர் அறிவுறுத்தியதின் பேரில் இக்குழு தனது கடமையை செய்ய முன்வருகிறது. முன் வருபவர்களை அரவணைக்கிறது. சமூக அரசியல் மாற்றத்திற்கு அனைவரையும் உரையாட அழைக்கிறது. தலித் மற்றும் தலித்தல்லாதார் அனைவருக்குமான அழைப்பு இது.
தலித் வரலாறு தெரிந்தோர் பயிற்றுவிப்போம்..
தலித் வரலாறு தெரியாதோர் பயிற்சி பெறுவோம்
தலித் வரலாற்றுப் பரப்புரை பயணத்தில் இணைந்திட
உங்கள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யுங்கள்..
மற்ற தோழர்களும் தகவல் தாருங்கள்

- தொடர்பாளர்

Comments

Popular posts from this blog

பண்டிதர் 175 - சிறப்பு வெளியீடு

பண்டிதர் 175 சிறப்பு வெளியீடு